×

ஆற்றில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி: உத்தரகாண்டில் சோகம்


பித்தோராகர்: உத்தரகாண்ட்டின் பித்தோராகர் மாவட்டம் லகான்பூர் அருகே தார்ச்சுலா-லிபுலேக் சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அதில், பெங்களூரை சேர்ந்த 2 பேர், தெலங்கானாவை சேர்ந்த 2 பேர், உத்தரகாண்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 6 பேர் உத்தரகாண்டில் உள்ள ஆதி கைலாஷ் கோயிலுக்கு புனித யாத்திரை சென்று திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென காளி ஆற்றில் கார் கவிழ்ந்து பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து பித்தோராகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருட்டான மற்றும் பாதகமான சூழ்நிலை காரணமாக, உடல்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தார்.

The post ஆற்றில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி: உத்தரகாண்டில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Pithoragarh ,Dharchula-Libulek road ,Lakhanpur ,Pithoragarh district ,Bangalore ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...