×

ஆந்திராவில் நடைபெற்ற விநோத திருவிழா; 2பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் காயம்

அமராவதி: ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள தேவர்கட் மலை பகுதியில் புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை விஜயதசமி அன்று திருகல்யாணம் நடைபெறும். இதனை அடுத்து அதனை சுற்றியுள்ள 23 கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கு வந்து வழிபட்டு தடியடி சண்டை நடத்துவது வழக்கம்.

அவ்வாறாக நேற்று இரவு, இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் தடியால் தாக்கி கொண்டதனால், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதில் அவசர சிகிச்சைகாக தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இந்த தடியடி திருவிழாவை நிறுத்த பல ஆண்டுகளாக நிறுத்த போலீசார் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் இல்லை.

இது தொடர்பாக அந்த கிராமமக்கள் கூறுவதாவது; பழங்காலத்தில் இருந்து இந்த விழா நடைபெறுவருகிறது. இந்த விழாவை கட்டுபடுத்த முடியாது. இதற்காக பாதுகாப்பு கூடுதலாக அளிக்க வேண்டும். என கூறினர். இந்நிலையில் போலீசார், இந்த தடியடி திருவிழாவிற்காக, சிசிடிவி கேமராக்கள் அதிக அளவில் வைத்து கண்காணித்து வந்தனர். மேலும் தடியடி திருவிழாவில் இரும்பு கம்பிகள், பயன்படுத்த கூடாது என போலீசார் வலியுறுதி வந்தனர்.

இந்த நிலையில் இந்த திருவிழாவை காணவந்திருந்தவர்கள் மரத்தின் மீது அமர்ந்து விழாவை பார்த்து கொண்டிருந்தபோது மரத்தின் கிளைகள் உடைந்து விழுந்தது. இதில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

The post ஆந்திராவில் நடைபெற்ற விநோத திருவிழா; 2பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Amaravati ,Malleswara Swamy Temple ,Devargat Hill ,Karnool district ,Strange festival ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்