×

பேய்க்குளம் அருகே விவசாயிக்கு மிரட்டல்

சாத்தான்குளம், அக். 25: சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் பொன்னையா. இவருக்கும், இதே ஊரை சேர்ந்த சாமுவேல் ஜெயசுந்தர் என்பவருக்கும் நிலப் பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 17ம் தேதி பொன்னையா, அவருக்கு சொந்த நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த சாமுவேல் ஜெயசுந்தர், அவரது மனைவி, சகோதரர் கிறிஸ்டியான் சில்வான்ஸ் ஆகியோர் உழவுப் பணியை தடுத்து அவரை அவதூறாக பேசியுள்ளனர். மேலும் மணலை அள்ளி வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் தம்பதி உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

The post பேய்க்குளம் அருகே விவசாயிக்கு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Beykulam ,Satankulam ,Meerankulam ,Samuel Jayasundhar ,Beikkulam ,Dinakaran ,
× RELATED வேலாயுதபுரத்தில் முப்பெரும்விழா