×

ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்த தமிழருக்கு மாநிலத்தின் உயர் பதவி: ஒடிசாவின் கேபினெட் அமைச்சரானார் வி.கே.பாண்டியன்

புபனேஸ்வர்: ஒடிசா முதலமைச்சரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் அம்மாநில கேபினெட் அமைச்சர் தகுதிக்கு இணையாக புதிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் தனது பணியில் இருந்து நேற்று விருப்ப ஓய்வு பெற்றார். அவரது விருப்ப ஓய்வினை ஒன்றிய அரசு ஏற்று கொண்டது.

இந்நிலையில் ஒடிசா அரசு சார்பில் மாநில கூடுதல் தலைமை செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டுள்ள அரசு உத்தரவு ஒன்றில் மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5T திட்டங்கள் மற்றும் ஒடிசாவில் தலைவராக வி.கே.பாண்டியனை நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி மாநில கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி என்றும் இனி வி.கே.பாண்டியன் முதலமைச்சருக்கு கீழ் நேரடியாக பணியாற்றுவர் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்த தமிழருக்கு மாநிலத்தின் உயர் பதவி: ஒடிசாவின் கேபினெட் அமைச்சரானார் வி.கே.பாண்டியன் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Cabinet Minister ,V. K. Pandian ,BUBANESWAR ,TAMIL NADU ,MINISTER ,. K. Pandian ,IAS ,
× RELATED பூரி ஜெகன்நாதர் கோயிலின் புதையல் அறை...