×

வழிப்பறி வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

 

திருப்பூர், அக்.23:திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் எதிரே கடந்த ஆகஸ்ட் 21ம்தேதி அன்று முரளிதரன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த சிலர் அவரை தாக்கி இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் நல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து யூசுப் முகமது ஹாஜி(19), என்பவரை நல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்கண்ட யூசுப் முகமது ஹாஜி தொடர்ந்து பொதுமக்களுக்கும்பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு ஆணையிட்டார்.
இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூசுப் முகமது ஹாஜியிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தப்பட்டதற்கான ஆணையை வழங்கினர்.

The post வழிப்பறி வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Tarapuram Road K. Chettipalayam ,Reliance Petrol Station ,Muralitharan ,
× RELATED மாநகராட்சிக்கு வரி செலுத்தாத பிரபல ஓட்டல் கட்டிடத்திற்கு சீல்