×

ஆர்டிஓ நடவடிக்கை ஆரணி அருகே படம் உண்டு

ஆரணி: ஆரணி அருகே ஆற்று மணல் கடத்துவதை தடுக்க ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகள் ஜேசிபி மூலம் ராட்சத பள்ளம் வெட்டி நடவடிக்கை எடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தச்சூர், மோட்டூர், அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள செய்யாற்று படுகையில் இருந்து மணலை, மாபியா கும்பல் கொள்ளையடித்து வருகிறது. இதற்காக பகல் நேரத்தில் ஆற்று மணலை சலித்து, அருகில் உள்ள முட்புதர், விவசாய நிலம் மற்றும் ஆற்றில் குவியல் குவியலாக சேகரித்து வைக்கின்றனர். இரவு நேரத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக ஆரணி ஆர்டிஓ தனலட்சுமிக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்து. அதன்பேரில், ஆர்டிஓ அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, விவசாய நிலம், முட்புதர், ஆற்றில் குவியல், குவியலாக மணல் சலித்து வைத்திருந்ததை கண்டு அதிர்சியடைந்தார்.

The post ஆர்டிஓ நடவடிக்கை ஆரணி அருகே படம் உண்டு appeared first on Dinakaran.

Tags : RTO ,Arani ,JCP ,Dinakaran ,
× RELATED ஆரணி தாலுகா அலுவலக பதிவறையில் அரசு...