×

இறுதியில் நீதி வெல்லும் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன்: சந்திரபாபுநாயுடு கடிதம்

திருமலை: மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறையில் அவரது மனைவி புவனேஸ்வரி நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சந்திரபாபு நாயுடுவைபொது மக்களுக்கு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் சிறையில் இல்லை. உங்கள் அனைவரின் இதயங்களிலும் இருக்கிறேன். மக்களே என் குடும்பம். தோல்வி பயத்தில் என்னை சிறைச் சுவர்களுக்குள் அடைத்து, மக்களிடம் இருந்து என்னை பிரித்து வைத்ததாக நினைக்கிறார்கள். நான் உங்களுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் வளர்ச்சி வடிவில் எங்கும் தோன்றிக்கொண்டே இருக்கிறேன். பொதுநலன் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம் நினைத்துக் கொண்டே இருப்பேன். ஒரு நாள் கூட மக்களிடம் இருந்து என்னை ஒரு நிமிடம் கூட பிரித்து வைக்க முடியாது. மக்கள்தான் என் பலம், மக்கள்தான் என் தைரியம். நீதி தாமதமாகலாம், ஆனால் இறுதியில் நீதி வெல்லும். உங்கள் ஆசிர்வாதத்துடன் விரைவில் வெளிவருவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post இறுதியில் நீதி வெல்லும் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன்: சந்திரபாபுநாயுடு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Tirumala ,Former ,Chief Minister ,Andhra Pradesh ,
× RELATED அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’,...