×

வீட்டில் மது அருந்தியதால் தகராறு மருமகளை வெட்டிய மாமனார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் டி.எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (38), டிரைவர். இவரது மனைவி ரம்யா (30) இருவரும், 5 ஆண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இவர்களுடன் வினோத் குமாரின் தந்தை குமரன் குட்டி (78), வசித்து வருகிறார்.  டீ கடையில் வேலை செய்து வரும் குமரன் குட்டி, தினமும் குடித்துவிட்டு மது பாட்டில் மற்றும் சிகரெட் துண்டுகளை வீட்டிலே போட்டு வைத்துள்ளார். இதனை மருமகள் ரம்யா, நேற்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த குமரன் குட்டி, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மருமகள் தலையில் வெட்டிவிட்டு தப்பினார். இதில் மருமகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரம்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரன் குட்டியை தேடி வருகின்றனர்.

The post வீட்டில் மது அருந்தியதால் தகராறு மருமகளை வெட்டிய மாமனார் appeared first on Dinakaran.

Tags : Tiruvotiyur ,D.S.R. Vinod Kumar ,Ramya ,
× RELATED வடிவுடையம்மன் கோயிலில் மாசி...