×

கோயில் வளாகங்களில் ஆர்எஸ்எஸ் ஆயுத பயிற்சி, போஸ்டர், கொடிகளுக்கு தடை: கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவிலுள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட 1200க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஆர்எஸ்எஸ் உள்பட மத இயக்கங்கள் ஆயுதப் பயிற்சி நடத்துவதாக கேரள அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.  இதைத் தொடர்ந்து கோயில்களில் ஆயுதப் பயிற்சி நடத்துவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேவசம் போர்டுக்கு கேரள அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஆயுதப் பயிற்சி நடத்த தடை விதிக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகும் பல கோயில்களில் ஆயுதப் பயிற்சி நடைபெறுவதாக மீண்டும் புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோயில்களில் ஆர்எஸ்எஸ் உள்பட மத இயக்கங்களின் சார்பில் ஆயுதப் பயிற்சி நடத்துவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது. கோயில் வளாகத்தில் அரசியல் கட்சிகள் உள்பட கோயிலுக்கு தொடர்பில்லாதவர்களின் படங்களோ, கொடிகளோ, போஸ்டர்களோ வைக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோயில் வளாகங்களில் ஆர்எஸ்எஸ் ஆயுத பயிற்சி, போஸ்டர், கொடிகளுக்கு தடை: கேரள அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala government ,Thiruvananthapuram ,Thiruvitangur Devasam Board ,Kerala ,Sabarimalai ,Ayyappan ,Temple ,Devasam ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...