×

இரணியல் அருகே கால்வாய் உடைந்து தண்டவாளத்தில் வெள்ளம் ரயில்கள் ரத்து பயணிகள் பரிதவிப்பு

நாகர்கோவில்:  நாகர்கோவில் அருகே தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியதால், நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏற்கனவே பல்வேறு கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமங்களில் உள்ள மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். இதே போல் நாகர்கோவில்  – திருவனந்தபுரம் ரயில் பாதையில், இரணியல் அருகே உள்ள தெங்கன்குழியில் கடந்த 11ம் தேதி இரவு தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது.  உடனடியாக மீட்பு குழுவினர் சென்று,  மண் சரிவு சரி செய்யப்பட்டு ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு மீண்டும் இரணியல் அருகே மண் சரிவு ஏற்பட்டது.இதனால் சென்னை – குருவாயூர், புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. மீட்பு குழுவினர் வந்து தண்டவாளத்தில் கிடந்த மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் மீட்பு பணி முடிந்து சென்னை  – குருவாயூர், மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பட்டன. தொடர்ந்து மழை பெய்த நிலையில்,  நாகர்கோவில் அருகே உள்ள வில்லுக்குறி – பேயன்குழி சாலையில் நுள்ளிவிளை பகுதியில் இரட்டைக்கரை சானலில் நேற்று அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்தது. அந்த பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டதுடன், அருகில் உள்ள ரயில் தண்டவாளத்திலும் வெள்ளம் புகுந்தது. சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியது. உடனடியாக இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சமயத்தில் குருவாயூரில் இருந்து சென்னை செல்வதற்கான குருவாயூர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்தை கடந்து, நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. உடனடியாக இந்த ரயில் பாறசாலையில் நிறுத்தப்பட்டது.இதே போல் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை நாகர்கோவிலுடன் நிறுத்தப்பட்டது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நாகர்கோவில், குழித்துறை ரயில் நிலையங்களில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக மீட்பு பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.இதனால் நேற்று நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சுமார் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். முக்கிய ரயில்கள் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சென்றன.ரத்து செய்யப்பட்ட ரயில்கள்தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியதால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்து, தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :* நாகர்கோவில் ஜங்ஷன் – கோட்டயம் (16366) தினசரி பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது.* சென்னை எழும்பூர்- குருவாயூர் தினசரி சிறப்பு ரயில்(16127) இன்று ரத்து செய்யப்படுகிறது.* கன்னியாகுமரி – கேஎஸ்ஆர் பெங்களூரு தினசரி ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில்(16525) நேற்று கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது.* கேஎஸ்ஆர் பெங்களூரு – கன்னியாகுமரி தினசரி ஐலண்ட் எக்ஸ்பிரஸ் (16526) திருவனந்தபுரம் சென்ட்ரல் – கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்பட்டது.* சென்னை எழும்பூர் – கொல்லம் ஜங்ஷன் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்(16723) நாகர்கோவில் சந்திப்புடன் நிறுத்தப்பட்டது.* கொல்லம் – சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (16724) நேற்று கொல்லம் -நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டு நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு சென்றது.* திருச்சி ஜங்ஷன்-திருவனந்தபுரம் சென்ட்ரல் தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(22627) நாகர்கோவில் ஜங்ஷனுடன் நேற்று நிறுத்தப்பட்டது. இந்த ரயில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டது.* திருவனந்தபுரம் சென்ட்ரல் திருச்சி ஜங்ஷன் தினசரி இன்டர்சிட்டி சிறப்பு ரயில் (22628) நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு சென்றது. திருவனந்தபுரம் – நாகர்கோவில இடையே நேற்று ரத்து செய்யப்பட்டது.* குருவாயூர் – சென்னை எழும்பூர் தினசரி எக்ஸ்பிரஸ்(16128) நெய்யாற்றின்கரையுடன் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் நெய்யாற்றின்கரை- சென்னை எழும்பூர் இடையே நேற்று ரத்து செய்யப்பட்டது.* நாகர்கோவில் ஜங்ஷன் -மங்களூர் சென்ட்ரல் தினசரி பரசுராம் எக்ஸ்பிரஸ்(16650) நேற்று திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த ரயில் நாகர்கோவில் -திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டது.* கன்னியாகுமரி -ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12666) நேற்று கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றது.* சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி தினசரி எக்ஸ்பிரஸ் (12633) நாகர்கோவில் ஜங்ஷனுடன் நிறுத்தப்பட்டது. நாகர்கோவில் – கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்பட்டது….

The post இரணியல் அருகே கால்வாய் உடைந்து தண்டவாளத்தில் வெள்ளம் ரயில்கள் ரத்து பயணிகள் பரிதவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanal ,Nagargo ,Thiruvananthapuram ,Nagarko ,Kumari ,Passengers Exchange ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...