×

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள் கடத்தல் தலைவன் கைது


ஸ்ரீநகர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்யும் பயங்கரவாத அமைப்பின் தலைவர் முகமது இக்பால் என்பவன், இமாச்சல பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக உளவு துறை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து குறிப்பிட்ட மறைவிடத்தில் இருந்த முகமது இக்பாலை, சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் ​​எல்லை வழியாக போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களை கடத்த அவன் திட்டமிட்டிருந்ததாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பயங்கரவாதிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் முகமது இக்பால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். கைது செய்யப்பட்ட முகமது இக்பாலிடம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டது.

The post பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள் கடத்தல் தலைவன் கைது appeared first on Dinakaran.

Tags : Pakistan ,India ,Srinagar ,Mohammad Iqbal ,Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED தீவிரவாதிகளுக்கு உதவ எல்லையில்...