×

வன பாதுகாப்பு சட்ட திருத்தம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி

 

புதுடெல்லி,அக். 21: வன பாதுகாப்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. வன பாதுகாப்பு திருத்த மசோதா 2023 என்ற பெயரில் ஒன்றிய அரசு சட்ட திருத்தத்தினை கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த நிலையில் மேற்கண்ட சட்டத்திற்கு எதிராக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர்கள், தேசிய வன வாரியத்தின் முன்னாள் உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் தொடர்ந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க கூறி நீதிபதி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

The post வன பாதுகாப்பு சட்ட திருத்தம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Government ,Supreme Court ,New Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED எம்.பி, எம்.எல்.ஏக்களை 24மணி நேரமும்...