×

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் தமிழ் மன்றம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் மற்றும் தமிழ் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட நாளான அக்டோபர்த் திங்கள் 21ம் நாள் ஆண்டுதோறும் நிறுவன நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு நிறுவன நாள் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவ துணை இயக்குநர் வீரபாகு சுப்பிரமணியன் தமிழ் மன்றம் சார்பில் நடத்தப்பெற்ற கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் கூறுகையில், ‘‘ஊடகம் சார்ந்த துறைகளில் மாணவிகள் பெருமளவில் பணியாற்றி வருவது பெருமைக்குரிய செய்தியாகும். இனி வரும் காலங்களில் தமிழுக்கு அரசுப் பணிகளில் உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’என்றார்.

The post உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் தமிழ் மன்றம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : World Tamil Research Institute Day ,Tamil Forum ,Chennai ,Tamil ,Forum ,
× RELATED அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் விழா