×

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே தொடர் திருட்டை தடுக்க காவல் பணியில் ஊர் பொதுமக்கள்..!!

திண்டுக்கல்: தொடர் திருட்டில் இருந்து தங்களை தாங்களே பாதுகாக்கும் பணியில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே ஊர் பொதுமக்கள் களமிறங்கி உள்ளனர். ஆத்தூர் தாலுகா ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் உள்ளது போக்குவரத்து நகர். சுமார் 400 குடும்பங்கள் வசித்து வரும் இந்த நகரில் பெருபாலானோர் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து நகரில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு வீடுகளில் திருட்டு நடைபெற்றதால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டாலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய போதிலும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்தன. எனவே தொடர் திருட்டில் இருந்து தங்கள் இல்லங்களை தாங்களே பாதுகாக்கும் பணியில் ஈடுபட ஊர் பொதுமக்கள் முடிவெடுத்தனர். அதன்படி தலா 25 பேர் கொண்ட குழுக்களாக இரவில் போக்குவரத்து நகர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தாற்போது நிம்மதியாக உணர்வதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

The post திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே தொடர் திருட்டை தடுக்க காவல் பணியில் ஊர் பொதுமக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul District Chinnalapatti ,Chinnalapatti ,Dindigul ,Dindigul district ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...