×

தீபாவளிக்கு கூடுதல் போனஸ் பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

 

திருப்பூர், அக்.20: பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் (எல்பிஎப்) ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி போனஸ் கடந்தாண்டை காட்டிலும் கூடுதலாக வழங்க வேண்டும். கொடுக்கப்படும் போனஸ். உரிய காலத்தில் கொடுத்து தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அவர்களுடைய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு துணிமணிகள் வாங்குவதற்கு ஏதுவாகவும், தீபாவளி பண்டிகைக்கு பத்து தினங்களுக்கு முன்பாக போனஸ் வழங்கிட வேண்டும்.

போனஸ் வழங்கும்போது, தொழிலாளர்களுடைய கணக்கு. முடித்து தருவதை தவிர்த்து, தொடர் சர்வீஸ் உடன் தொழிலாளர்களை பணிக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.தொழிலாளர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உரிய காலத்தில் போனஸ் வழங்கிட வேண்டும் என நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும்.

மறுக்கின்ற நிர்வாகங்களில் தொழிற்சங்கங்களின் மூலம் அணுகி உரிய காலத்தில் போனஸ் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் போனஸ் பெறும்போது,பண்டிகை மற்றும் விடுமுறை சம்பளம் ஆகியவற்றை கேட்டுப்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post தீபாவளிக்கு கூடுதல் போனஸ் பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Banyan Labor Progress Sangh ,Diwali ,Tirupur ,Ramakrishnan ,LPF ,Dinakaran ,
× RELATED திருமூர்த்தி குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு