×

ஆயுதபூஜையை முன்னிட்டு எழும்பூர்-நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை: ஆயுதபூஜை முன்னிட்டு சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர்- நெல்லை ரயில் எண் (06043) இடையே அதிவேக விரைவு சிறப்பு ரயில் இன்று இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு நெல்லை சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக நெல்லை- தாம்பரம் இடையே ரயில் எண் (06044) அதிவேக விரைவு சிறப்பு ரயில் வரும் 24ம் தேதி நெல்லையில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மேலும் சென்னை சென்ட்ரல்-மங்களூரு இடையே ரயில் எண் (06047) அதிவேக விரைவு சிறப்பு ரயில் இன்று இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4 மணிக்கு மங்களூரு சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக மங்களூரு- சென்னை சென்ட்ரல் இடையே (06048) இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.20 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆயுதபூஜையை முன்னிட்டு எழும்பூர்-நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் appeared first on Dinakaran.

Tags : Egmore-Nella ,Ayudha Puja ,CHENNAI ,Southern Railway ,Chennai Egmore ,Nellai ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...