×

சேலம் சிறையில் தூக்கில் தொங்கிய ஆயுள் கைதி

சேலம்: சேலம் மத்திய சிறையில், சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பழனிசாமி (48) அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென தனது செல்லில் உள்ள கம்பியில் சட்டையை கயிறாக்கி தூக்கில் தொங்கினார். இதனை அதே அறையில் அடைக்கப்பட்டிருந்த 3 கைதிகள் பார்த்து, உடனடியாக அவரை மீட்டு காப்பாற்றினர். கழுத்து இறுகியதில் பழனிசாமி காயமடைந்ததற்கு சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றி அறிந்த சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத், தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற பழனிசாமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மன அழுத்தத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே சிறை மருத்துவமனையில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் பழனிசாமியை சேர்த்தனர். அங்கு மனநல ஆலோசகர்கள், அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய 3 கைதிகளையும் சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டி, சிறையில் தயாரான லட்டு மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினர்.

The post சேலம் சிறையில் தூக்கில் தொங்கிய ஆயுள் கைதி appeared first on Dinakaran.

Tags : Salem Jail ,Salem ,Palaniswami ,Kandampatti ,Salem Central Jail ,Jail ,
× RELATED கட்சியை விட்டு நீக்கம் எடப்பாடிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஏ.வி.ராஜூ