×

ஆரணி அடுத்த இரும்பேட்டில் நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து அதிமுக கல்வெட்டு?.. ஆர்டிஓ போலீசில் புகார்

ஆரணி: ஆரணி அடுத்த இரும்பேட்டில் நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரிமித்து அதிமுக கல்வெட்டு அமைத்துள்ளதாக ஆர்டிஓ மற்றும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு கூட்ரோடு பகுதியில் ஆற்காடு சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரும்பேடு கூட்ேராட் பகுதியில் அதிமுகவை சேர்ந்த சிலர், அங்கிருந்த சில மரங்களை அகற்றி அப்பகுதியில் கட்சிக்கொடி ஏற்றுவதற்காக கல்வெட்டு அமைத்து சுற்றி மேடை அமைத்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கொடிக்கம்ப மேடை அமைந்துள்ள இடம் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானது எனவும், அங்கு ஆக்கிரமிப்பு செய்து மேடை அமைத்துள்ளதாகவும் அதனை அகற்றவேண்டும் எனக்கூறி அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ தனலட்சுமியிடம் நேற்று புகார் செய்தார். புகாரில், எனது வீட்டின் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை இரும்ேபடு கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் வேலு, சரவணன் உள்பட சிலர், ஆக்கிரமித்து கொடிக்கம்பம் அமைப்பதற்காக கல்வெட்டு மேடை அமைத்துள்ளனர். அங்கு தள்ளுவண்டி கடை வைத்து பூக்கள், சோப்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகிறேன். ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கடை வைக்க முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கிறது. மேலும் எனது வீட்டிற்கு சென்று வர சிரமமாக உள்ளது. தட்டிக்கேட்டால் என்னை 20க்கும் மேற்பட்ட நபர்கள் மிரட்டுகின்றனர்.

மேலும் சிலர் அங்கு அமர்ந்து மதுகுடிக்கின்றனர். எனவே எனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள மேடையை இடித்து அகற்றவேண்டும் என தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட ஆர்டிஓ தனலட்சுமி, புகாரின்பேரில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதேபோல் இந்த புகாரை ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திடமும் அந்த நபர் அளித்துள்ளார் அதன்பேரில் ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஆரணி அடுத்த இரும்பேட்டில் நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து அதிமுக கல்வெட்டு?.. ஆர்டிஓ போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Arani ,Irumpet ,RTO ,AIADMK ,RTO Police ,Dinakaran ,
× RELATED ஆரணி தாலுகா அலுவலக பதிவறையில் அரசு...