×

‘மக்களோடுதான் பாஜ கூட்டணி’ அதிமுகவினர் விமர்சனம் குறித்து கவலை இல்லை: அண்ணாமலை பேட்டி

கோபி: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்றிரவு அளித்த பேட்டி: மக்களுக்கு தற்போதைய நடைமுறை அரசியல் பிடிக்கவில்லை. அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து என்னை விமர்சிப்பது குறித்து நான் கவலைப்பட்டதில்லை. எனக்கு என்று தனிப்பாணி அரசியல் உள்ளது. என்னுடைய கருத்துகளை ஆக்ரோஷமாக, உரக்கமாக தொடர்ந்து பேசி வருகிறேன்.

தமிழகத்திற்கு வேறு அரசியல் தேவைப்படுகிறது. தமிழகத்தில் இன்று பாஜ தான் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது. மற்றவர்கள் அறிக்கை கொடுக்கிறார்கள்; ஏசி அறையில் அமர்ந்து கொண்டு பேசுகின்றனர். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு மக்களோடு தான் கூட்டணி என்றார்.

The post ‘மக்களோடுதான் பாஜ கூட்டணி’ அதிமுகவினர் விமர்சனம் குறித்து கவலை இல்லை: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Annamalai ,Gobi ,Tamil Nadu ,Erode district ,Gopi ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...