×

ரத்த சோகையை தவிர்க்க சில எளிய வழிகள்

நன்றி குங்குமம் டாக்டர்

பெரும்பாலான உடல் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் ரத்த சோகைதான். இந்த ரத்த சோகை ஆண் பெண் இருவரையும் பாதிக்கும். இருந்தாலும், ஆண்களை விட பெண்களையே ரத்த சோகை அதிகம் தாக்குகிறது. இது ஒரு நோயல்ல. ஆனால் அதிகப்படியான நோய்களுக்கு ரத்த சோகையும் முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. ரத்த சோகை என்பது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதோ அல்லது உடலில் ரத்த அணுக்கள் உருவாவதே குறைவாக இருப்பதேயாகும்.

ரத்த சோகையின் அறிகுறிகள்

*வெளிறிய முகம் அல்லது மெலிந்த தோள்
*கண் இமையின் உட்புற பகுதி வெளிறி இருப்பது
*வெளிறிய ஈறுகள்
*பளபளப்பான, மிருதுவான நாக்கு
*வெளிறிய விரல் நகங்கள், வளைந்த நகங்கள்
*பலவீனம், களைப்பு
*முகம் மற்றும் கால் வீக்கம்
*இருதய படபடப்பு
*மூச்சு வாங்குதல்
*மண், சாம்பல், சுண்ணாம்பு இவைகளை சாப்பிட விரும்புவது.

ரத்த சோகையை தடுக்கும் முறைகள்

இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளான கம்பு, வரகு, கேழ்வரகு, அவல் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பசலைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கை, அகத்திக்கீரை உணவில் அதிகம் சேர்க்கலாம்.பயறு, மொச்சை பயறு மற்றுமுள்ள பருப்பு வகைகளிலும் இரும்புச்சத்து உள்ளது.வெல்லம், இறைச்சி, மீன், முட்டை இவைகளிலும் இரும்புச்சத்து அதிகமான அளவு உள்ளது.

பழம் வகைகளில் ஆப்பிள், கருப்பு திராட்சை, பேரீச்சை, மாதுளை என சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிற பழங்களை உணவில் அதிகளவில் சேர்ப்பது ரத்த சோகையை கட்டுப்படுத்தும். பீட்ரூட், கேரட், சிவப்பு முள்ளங்கி போன்ற காய்கறிகளும் ரத்த சோகையை கட்டுப்படுத்த உதவும்.ரத்த சோகை குறைபாட்டை சரிசெய்ய நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை விட இயற்கையான உணவுமுறை மூலமாகவே ரத்த சோகையை சரி செய்வதில் ஈடுபடுவது சிறந்தது.

இயற்கை சூரணங்களான பொடி வகைகள் அல்லது நெல்லிபொடி, கருவேப்பிலைபொடி, கரிசாலைபொடி, செம்பருத்தி பொடி, முருங்கைபொடி இவைகளை ரத்த சோகையை தடுப்பதற்கு பயன்படுத்தலாம்.மேலும், முருங்கைப் பூ லேகியம், நெல்லிச்சாறு, மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் போன்ற ஊட்டச்சத்துகளையும் சேர்க்கலாம் இவை ரத்த சோகையை கட்டுப்படுத்தும்.

தொகுப்பு: இரா. அமிர்தவர்ஷினி

The post ரத்த சோகையை தவிர்க்க சில எளிய வழிகள் appeared first on Dinakaran.

Tags : Dr.Kumkum ,
× RELATED மானுடம் போற்றும் மகத்தான சேவை… புற்றுநோயாளிகள் பராமரிப்பு!