×

லியோ திரைப்படத்தை காண திரையிரங்கின் பின் பக்க சுவற்றில் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிந்தது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 4 திரையரங்கில் லியோ திரைப்படம் வெளியானது.  திரைப்படத்தை பார்க்க டிக்கெட் கிடைக்காததால் திரையிரங்கின் பின் பக்க சுவற்றில் ஏறி குதித்த விஜய் ரசிகரின் கால் முறிந்தது.

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது. கிருஷ்ணகிரியில் உள்ள 4 திரையரங்குகளில் லியோ திரைப்படம் இன்று வெளியானது. திரைப்படத்தை காண காலை முதலில் ரசிகர்கள் திரை அரங்கிற்கு வெளியே காத்திருந்தனர். இந்நிலையில் காலை 9 மணி அளவில் கிருஷ்ணகிரியில் லியோ திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் டிக்கெட் வாங்கி முந்தி அடித்து திரையரங்கிற்குள் சென்றனர்.

அப்போது, கிருஷ்ணகிரி பச்சிகானப்பள்ளி பகுதியை அன்பரசு என்ற விஜய் ரசிகர் லியோ படத்திற்கு முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காததால் காலை முதலே திரையரங்கு உள்ளே அனுமதிமதிக்குமாறு வாக்குவாதம் செய்த வந்த நிலையில் உள்ளே அனுமதிக்காததால் திரையரங்கின் பின்பக்க சுவற்றில் ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்ற போது தவறி விழுந்து இளைஞரின் கால் முறிவு. இளைஞரை மீட்ட காவல்துறையினர் அறிவுரை கூறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post லியோ திரைப்படத்தை காண திரையிரங்கின் பின் பக்க சுவற்றில் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிந்தது appeared first on Dinakaran.

Tags : Leo ,
× RELATED சிம்மம்