×

சொட்டுநீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தேன்கனிக்கோட்டை, அக்.19: கெலமங்கலம் வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ், பைரமங்கலம் கிராமத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. கெலமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் கலா தலைமை தாங்கி, ‌விவசாயிகள் கிசான் கடன்அட்டை பெறுவதன் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார். வேளாண் உதவி பொறியாளர் அக்பர், சொட்டுநீர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்து எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், மத்திய, மாநில அரசுகளின் வேளாண் துறை சார்ந்த மானிய திட்டம் மற்றும் பாரம்பரிய வேளாண்மை குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் சுந்தர்ராஜ், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், இடுபொருட்கள், உபகரணங்கள், பண்ணைக் கருவிகள் குறித்து விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா, உழவன் செயலியின் அவசியம் குறித்து விளக்கினார். மேலும், கிசான் கடன் அட்டை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post சொட்டுநீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Kelamangalam district ,Bairamangalam ,Dinakaran ,
× RELATED மரக்கன்று நடும் விழா