×

சட்டப்பேரவையில் சதியை அம்பலப்படுத்துவோம் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ சதி: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் ஆட்சியமைத்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கவும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கவரவும் பாஜவில் ஒரு தனி குழுவே செயல்பட்டுவருகிறது. பாஜ சார்பில் எங்கள் எம்.எல்.ஏக்களை அழைத்து என்ன டீல் பேசினார்கள் என்பதை எங்கள் எம்.எல்.ஏக்கள் என்னிடமும் முதல்வரிடமும் தெளிவாக தெரிவித்துவிட்டனர். எனவே காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பது எங்களுக்கு தெரியும்.
அனைத்து தகவல்களும் எங்களிடம் உள்ளன. ஆனால் அதை இப்போது சொல்லமாட்டோம். எங்கள் எம்.எல்.ஏக்கள் யார் யாரை பாஜ அணுகினார்களோ, அந்த எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையில் பேசவைப்போம்’ என்றார்.

The post சட்டப்பேரவையில் சதியை அம்பலப்படுத்துவோம் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ சதி: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Deputy Chief Minister ,DK Sivakumar ,Bengaluru ,Congress party ,Karnataka assembly elections ,chief minister ,Siddaramaiah ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் தென்மாநில...