×

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளை பூண்டு பயிரிடும் பணியில் விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி: நீலகிரி பூண்டிற்கு விலை அதிகமாக கிடைப்பதால், தற்போது பூண்டு பயிரிடுவதில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மழை காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி மற்றும் வெள்ளை பூண்டு ஆகியவை பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வெள்ளை பூண்டுக்கு அதிக விலை கிடைப்பதால், பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பூண்டு ஒரு கிலோ ரூ.300 வரை விலை போவதால், பூண்டு பயிருக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நிலங்களில் மீண்டும் பூண்டு பயிரிட ஆயத்தமாகி வருகின்றனர். இதில், குறிப்பாக ஊட்டி அருகே உள்ள முத்தரைப்பாலாடா, கேத்தி பாலாடா, காட்டேரி போன்ற பகுதிகளில் தற்போது விவசாயிகள் பூண்டு பயிரிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post நீலகிரி மாவட்டத்தில் வெள்ளை பூண்டு பயிரிடும் பணியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Neelgiri ,Neelgiri district ,Dinakaran ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...