×

புரட்டாசி முடிந்ததால் முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு: நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி


நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. தினமும் சுமார் 4 கோடி முட்டை உற்பத்தியாகிறது. இந்த முட்டைகள், தமிழகம், கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு வாரம் 3 கோடி முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. வழக்கமாக புரட்டாசி மாதங்களில் முட்டையின் நுகர்வு குறையும். இந்துக்களில் பெரும்பாலான மக்கள் புரட்டாசி விரதம் கடைபிடிப்பதால் முட்டை, இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பார்கள்.

இதனால் இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில், முட்டை விற்பனை குறைந்தது. இதனால் பண்ணையாளர்கள் முட்டையின் உற்பத்தியை குறைத்து கொண்டனர். தினசரி உற்பத்தியில் சுமார் 60 முதல் 70 லட்சம் வரை உற்பத்தி குறைந்தது. இதனால் முட்டை விலையில் பெரிய மாற்றம் இன்றி 5 முதல் 10 காசுகள் வரை உயர்த்தப்பட்டது. தற்போது ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 510 காசாக இருக்கிறது. நேற்றுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்து விட்டது. இன்று ஐப்பசி பிறந்தது.

இதனால் முட்டையின் நுகர்வு அதிகரிக்கும் என பண்ணையாளர்கள் கூறுகின்றனர். நாமக்கல் மண்டலத்தில் இருந்து இலங்கை, துபாய், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த முட்டைகள் என்பதால், பல்வேறு இடங்களில் இருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர் அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

The post புரட்டாசி முடிந்ததால் முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு: நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal mandal ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...