×

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிவு: கறிக்கோழி விலையும் குறைந்தது

நாமக்கல்: கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் மண்டலத்தில் முட்டை மற்றும் கறிக்கோழி விலை சரிந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, கடந்த 3 நாட்களாக 440 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முட்டை விலையில், என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் 10 காசுகள் குறைத்து விலை நிர்ணயம் செய்துள்ளார். இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 430 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், முட்டை விற்பனை பாதித்துள்ளது. மேலும், கடுமையான வெப்பம் வீசுவதால், முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் முட்டை விலை குறைந்துள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதே போல், கறிக்கோழியின் விலையும் சரிந்துள்ளது. பல்லடத்தில் நேற்று ஒரு கிலோ கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலை ₹127 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலையில் ₹6 வரை குறைந்துள்ளது. கேரளாவில் நிலவி வரும் பறவை காய்ச்சல் பீதியால், கறிக்கோழி விற்பனை குறைந்துள்ளதால் விலை குறைக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிவு: கறிக்கோழி விலையும் குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Namakkal Mandal ,Namakkal ,NECC ,Dinakaran ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...