×

உலக சுற்றுலா தினத்தையொட்டி ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா: மாணவர்களை கலெக்டர் வழியனுப்பினார்

 

தேனி, அக். 18: உலக சுற்றுலா தினத்தையொட்டி ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா சென்ற மாணவர்களை கலெக்டர் ஷஜீவனா வழியனுப்பி வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தினத்தையொட்டி பள்ளி மாணவ,மாணவியர் மத்தியில் சுற்றுலா குறித்து கலாச்சார அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு அரசு அறிவித்துள்ளது.

இதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம் தாலுகாவிற்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 90 மாணவ, மாணவியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 90 மாணவ,மாணவியர் மற்றும் 20 ஆசிரியர்கள் என மொத்தம் 200 பேர் 3 பேருந்துகளில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ஆண்டிபட்டியில் உள்ள அருங்காட்சியகம்,

வைகை அணை மற்றும் வைகை அணை பூங்காவை பார்வையிட்ட பின்னர், அங்கிருந்து தேனி புதிய பேருந்து நிலையத்தினை வந்தடையும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நாள் சுற்றுலா சென்ற மாணவ,மாணவியரை கலெக்டர் ஷஜீவனா வழியனுப்பி வைத்தார். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இந்துமதி, சுற்றுலா அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post உலக சுற்றுலா தினத்தையொட்டி ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா: மாணவர்களை கலெக்டர் வழியனுப்பினார் appeared first on Dinakaran.

Tags : World Tourism Day ,Theni ,Shajeevana ,
× RELATED கலெக்டரிடம் புகார்