திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வசிப்பவர் சுதா (42). இவர், கொரடாச்சேரி பெருமாள் அகரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மதியழகன் (65), தனது நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார். அதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தரும்படி விஏஓ சுதா கேட்டுள்ளார். இதுபற்றி மதியழகன், திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனை பேரில் ரசாயனம் தடவிய ரூ.6ஆயிரத்துடன் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மதியழகன் நேற்று சென்று விஏஓ சுதாவிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார், விஏஓ சுதாவை பிடித்து கைது செய்தனர்.
The post விவசாயியிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெண் விஏஓ கைது appeared first on Dinakaran.