×

ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மர்ம காரில் சோதனை: வருவாய்துறை அதிகாரி விசாரணை

பெரம்பூர்: ராயபுரம் மாடி பூங்கா பகுதி அருகே ஆந்திரமாநிலம் பதிவுஎண் கொண்ட கார் கடந்த 4 நாட்களாக சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக, வன மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுபாட்டு பிரிவு மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், வனத்துறையினர் நேற்று சென்று காரை சோதனை செய்ய சென்றனர். இதில், காரை முழுவதுமாய் திறந்து சோதனை செய்ய தண்டையார்பேட்டை வருவாய்த்துறை அதிகாரியான தாட்சாயிணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன் பிறகு காரின் கண்ணாடி பெயர்க்கப்பட்டது. பின்னர், காரின் கதவுகள் திறந்து பார்த்தபோது. அதில், இருந்த வேட்டியில் செம்மரக்கட்டையின் துகள்கள் மற்றும் சிம்கார்டின் கவர் உள்ளிட்டவை இருந்தது. செம்மரக்கட்டைகளை வேட்டியில் வைத்து கடத்தி வந்து அவற்றை, எடுத்து சென்று விட்டு காரினை மர்ம நபர்கள் ஓரம் நிறுத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த காரை ஓட்டி வந்தது யார், செம்மரக்கட்டைகள்தான் கடத்திவரப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

The post ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மர்ம காரில் சோதனை: வருவாய்துறை அதிகாரி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Rayapuram Madi Park ,Andhra ,Revenue ,Dinakaran ,
× RELATED நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால்...