×

குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி

திருத்தணி: திருத்தணி அருகே உள்ள கே.ஜி.கண்டிகையில் உள்ள பள்ளி ஒன்றில் இந்திய சமுதாய நல நிறுவனம் சார்பில் மாணவிகள் குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது, ‘‘எனது பகுதியிலோ அல்லது சமூகத்திலோ குழந்தை திருமணம் நடப்பது தெரியவந்தால், எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன், எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் போன்ற அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன், குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும் தடையற்ற கல்விக்காகவும் தொடர்ந்து செயல்படுவேன்’’ என உளமாற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதற்கு முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அமலி வரவேற்றார். மாவட்ட வள மேலாளர் செந்தில்குமார், மேற்பார்வையாளர் ஏழுமலை, தொடர் பணியாளர்கள் குமாரி, முத்துலட்சுமி, குணவதி ஆகியோர் பங்கேற்றனர்.

The post குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,KG Kandigai ,Indian Social Welfare Institute ,
× RELATED தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை!