×

சென்னை தலைமைச் செயலகத்திற்கு லியோ படத்தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள் குழுவினர் வந்த கார் விபத்து!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்திற்கு லியோ படத்தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர் குழுவினர் வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த பெண் காயமடைந்துள்ளார். உள்துறை செயலாளரை சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு, ஓட்டுநரை காரை எடுத்து வரச் சொல்லியபோது விபத்து நடந்துள்ளது. கார் மோதியதில் கீழே விழுந்து லேசாக காயமடைந்த பெண்ணின் செல்போன், வாகனம் ஆகியவற்றின் சேதங்களுக்கு வழக்கறிஞர் குழு பொறுப்பேற்பதாக கூறியதை அடுத்து, புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

The post சென்னை தலைமைச் செயலகத்திற்கு லியோ படத்தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள் குழுவினர் வந்த கார் விபத்து! appeared first on Dinakaran.

Tags : Leo film production ,Chennai ,Leo Film Production Company ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...