×

ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாளான நாளை பத்திரப் பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு: வணிகவரி மற்றும் பதிவுத்துறை

சென்னை: ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாளான நாளை பத்திரப்பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்துள்ளனர். சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

வரவிருக்கும் ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 18.10.2023 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனை ஏற்று ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 18.10.2023 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாளான நாளை பத்திரப் பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு: வணிகவரி மற்றும் பதிவுத்துறை appeared first on Dinakaran.

Tags : Aippasi ,Commercial Tax and Registration Department ,CHENNAI ,Aippassi ,Aipasi ,Dinakaran ,
× RELATED துலாம் ராசியினர் குணத்தில் அமைதி, செயலில் வேகம்!