×

சென்னை பூவிருந்தவல்லி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் சக்தி சரவணன்(10) பலியானார். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிழந்தார்.

பூவிருந்தவல்லி அருகே சிறுவன் சக்தி சரவணன் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8ம் தேதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவன், இன்று அதிகாலை 3.50 மணியளவில் உயிரிழந்தார்.

சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் முதலில் அருகே உள்ள கிளீனிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது சிறுவனுக்கு ரத்த அணுக்கள் குறைய துவக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

சிறுவனுக்கு ரத்த அணுக்கள் குறைதல், ரத்தம் உரைதல் போன்ற டெங்கு அறிகுறிகள் இருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை பூவிருந்தவல்லி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Poovindavalli, Chennai ,Chennai ,Shakthi Saravanan ,Chenneerkuppam ,
× RELATED பூவிருந்தவல்லி அருகே தனியார்...