×

கோயம்பள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

 

கருர், அக். 17: கோயம்பள்ளி கிராமத்தில் நாளை மனு நீதி முகாம் நடக்கிறது. கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம், மண்மங்கலம் குறுவட்டம், கோயம்பள்ளி கிராமத்தில் (வரும் 18ம்தேதி) நாளை மாலை 3மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், பல்வேறு அரசுத்துறையைசேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களது துறை சார்பாக வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கின்றனர். மேலும், அரசு சார்பாக கண்காட்சி நடைபெறவுள்ளன. எனவே, கோயம்பள்ளி கிராம மக்கள் மனுநீதி நாள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறபட்டுள்ளது.

The post கோயம்பள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் appeared first on Dinakaran.

Tags : Human Justice ,Day ,Camp ,Goyambally ,Karur ,District Revenue Officer ,Human ,Justice Day Camp ,Dinakaran ,
× RELATED கரூர் கொங்கு கல்லூரியில் பொங்கல் தின விழா