×

கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க கோரி முற்றுகை போராட்டம்

 

கீழ்வேளூர். அக்.17: கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க கோரி, நாகையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவகத்தை குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். பல தலைமுறைகளாக கோயில் மடம், வக்போடு, தேவாலயம் போன்ற இடங்களில் குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும், பல தலைமுறைகளாக அடிமனைகளில் வீடு, சிறு கடைகள் கட்டி பயன்படுத்தி வருபவாகளை ஆக்கிரமைப்பாளர்கள் என்ற பெயரில் இடத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

கொரோனா கால அடிமனை வாடகையை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் கணபதி தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மாநில பொருளாளர் துரைராஜ், மாவட்டச் செயலாளர் சிவக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் வடிவேல், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், சிஐடியூ மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மணி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க கோரி முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Lower Vellore ,Nagai ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...