×

வாசுதேவநல்லூரில் கட்டபொம்மன் நினைவு தினம்

சிவகிரி,அக்.17: வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 224வது நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். நெல்கட்டும்செவல் பஞ். தலைவர் பாண்டியராசா, மதிமுக நகரச் செயலாளர் கணேசன், திமுக முன்னாள் ஒன்றிய அவைத்தலைவரும், கவுன்சிலருமான மாரிமுத்து முன்னிலை வகித்தனர். இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திமுக ஒன்றிய பொறுப்புக்குழு முன்னாள் உறுப்பினர் கட்டபொம்மன், காங்கிரஸ் விவசாய அணி வட்டாரத் தலைவர் முருகேசன், சோலை ராமசாமி, சந்திரன், முன்னாள் பேருராட்சி மன்றத் துணை தலைவர் செல்வம், சுந்தர், சக்திவேல், ராஜகம்பள நாயக்கர் சமுதாய நாட்டாண்மை நவநீதகிருஷ்ணன், வேல்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post வாசுதேவநல்லூரில் கட்டபொம்மன் நினைவு தினம் appeared first on Dinakaran.

Tags : Kattabomman memorial day ,Vasudevanallur ,Sivagiri ,Veerapandiya Kattabomman ,Veerapandiya Kattabomman Foundation ,
× RELATED வாசுதேவநல்லூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி