×
Saravana Stores

பெண் தற்கொலை

சிவகிரி,ஜூலை 13: வாசுதேவநல்லூர் அருகே குடும்ப பிரச்னையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வாசுதேவநல்லூர் பசும்பொன் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சாந்தி (40). இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடம் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சாந்தி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் கண்மணி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

The post பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sivagiri ,Vasudevanallur ,Mariyappan ,Vasudevanallur Pasumbon Second Street ,Shanti ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி...