×

2வது திருமணம் செய்து வைப்பதாக கூறி நகை, பணம் மோசடி

சேலம், அக்.17: சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (32). நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எனக்கு கடந்த 2013ம் ஆண்டு அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவருடன் திருமணமானது. கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். கடந்த 2021ம் ஆண்டு கொரோனாவில் எனது பெற்றோர் இறந்து விட்டனர். அப்போது, பூர்வீக சொத்தை விற்றதன் மூலம் வந்த எனது பங்கில், ₹12 லட்சம், 25 பவுன், 2 கிலோ வெள்ளியை வங்கியில் சேமிப்பாக வைத்தேன். இதனிடையே, எனக்கு 2வது திருமணம் செய்து வைப்பதாக கூறி எனது அண்ணன், மற்றொரு வீட்டை எழுதித்தரும்படி கேட்டார். மேலும், எனக்கு தெரியாமலேயே, அண்ணனும், அண்ணியும் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ₹12 லட்சம் பணம் மற்றும் நகையை எடுத்துக் கொண்டு மோசடி செய்தனர். இதுகுறித்து கேட்டபோது, பணம், நகையை திரும்ப தர முடியாது எனக்கூறி மிரட்டல் விடுத்தனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணம், நகையை மீட்டு தர வேண்டும்,’’ என்றார்.

The post 2வது திருமணம் செய்து வைப்பதாக கூறி நகை, பணம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Salem ,Aishwarya ,Salem Dadagapatti ,Salem Collector ,
× RELATED ஆயுள் தண்டனை கைதிக்கு பரோல்