×

காசாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும், ஆனால் அதனை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக்கூடாது : அமெரிக்க அதிபர் ஜோபிடன் கருத்து!!

வாஷிங்டன் : இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோபிடன் முரணான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு, கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாசை அழிக்க காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது.இஸ்ரேலின் தாக்குதலில் காசா நகரில் 2,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஹமாஸின் தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். முன்னதாக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை 24 மணி நேர கெடு விதித்தது. இதற்காக பாதுகாப்பான பாதைகளையும் அறிவித்தது. அந்த வழியாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கார்களிலும், லாரிகளிலும், கழுதை வண்டிகளிலும் பயணித்து வருகின்றனர். நேற்று முன்தினமே இந்த கெடு முடிந்தாலும், இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து அவகாசத்தை நீட்டித்து வருகிறது.

இதனிடையே காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்ட தரை, வான், கடல் வழியாக முழு அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேலின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது. தரை வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் எல்லைக்கு மிக நெருக்கமாக முன்னேறி உள்ளன. எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், காசாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், காசாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும், ஆனால் அதனை ஆக்கிரமிக்கக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன்,” காசாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்.காசாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும், ஆனால் அதனை அக்கிரமிக்கக்கூடாது.நீண்ட நாட்களுக்கு காசாவை இஸ்ரேல் கட்டுப்படுத்த முடியும் என்று தான் நம்பவில்லை.பாலஸ்தீனியர்கள் தான் அந்தப் பகுதியை ஆட்சி செய்ய வேண்டும். இஸ்ரேல் – ஹமாஸ் போர் தீவிரம் அடைந்துள்ளதால் கணிசமான இழப்புகள் ஏற்படக்கூடும். காசாவின் தெற்கு பகுதிக்கு குடிநீர், மின்சாரம், உணவு வழங்கப்படும் .போர் விதிகளை பின்பற்றி இஸ்ரேல் செயல்படும்,” என உறுதி அளித்துள்ளார்.

The post காசாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும், ஆனால் அதனை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக்கூடாது : அமெரிக்க அதிபர் ஜோபிடன் கருத்து!! appeared first on Dinakaran.

Tags : Hamas ,Gaza ,Israel ,US President Jopidan ,WASHINGTON ,U.S. President ,Jobidan ,Palestine ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...