×

வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டத்தில் சேர விரும்புவோர் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திற்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்: வீடுகளில் வளர்க்கப்படும் விலங்கினங்களில் கைவிடப்பட்ட, தெருவில் திரியும் விலங்குகளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் காப்பாற்றி பராமரித்து வருகின்றனர். சில தொண்டு நிறுவனங்கள் இந்திய விலங்குகள் நல வாரிய நிதி உதவியுடன் நாய்கள், ஆடுகள், மாடுகள், பன்றிகள், பூனைகளை பராமரித்து வருகின்றன. இந்நிறுவனங்கள் முயற்சிகளை வலுப்படுத்திட, தீவிரமாக கால்நடைகள் பராமரிப்பு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.20கோடி நிதி ஒதுக்கி வள்ளலார் பல்லுயிர் காப்பகம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் விலங்குகளுக்கு உணவு வழங்குவது, மருத்துவ செலவுகள் மேற்கொள்வது, தடுப்பூசி பணி மேற்கொள்வது, அவசர சிகிச்சை ஊர்தி வாங்க நிதி உதவி வழங்குகிறது. விலங்கின ஆர்வலர்கள் தெருவில் திரியும் நாயினங்களுக்கு ஆங்காங்கே உணவுகள் வழங்குவதால் தெருநாய்கள் தொல்லை மற்றும் மக்களிடையே பீதி அதிகரித்து வருகிறது.

The post வள்ளலார் பல்லுயிர் காப்பகம் திட்டத்தில் சேர விரும்புவோர் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திற்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Animal Welfare Board ,Virudhunagar ,Vallalar ,Dinakaran ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...