×

முத்தணம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 59-வது வார்டுக்கு உட்பட்ட முத்தணம்பாளையம் கரிய காளியம்மன் மண்டபத்தில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை துவங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இம்முகாமில் பொது மருத்துவம், மகப்பேறு, மூக்கு, கண், காது, தொண்டை உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், உயர் சிகிச்சை தேவைப்படுகிறவர்களும் உயர் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, மாநகர் நல அதிகாரி கௌரி சரவணன், உதவி ஆணையர் வினோத், கவுன்சிலர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post முத்தணம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Muthanampalayam ,Tirupur ,Muttanampalayam ,Kariya Kaliamman Mandapam ,Ward ,Tirupur Corporation ,Varumun Kappom ,
× RELATED கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்