×

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

குலசேகரம், அக்.15: வைணவ திருத்தலங்களில் புகழ் பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நேற்று (14ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு காலை நிர்மால்யம்,  பூத பலியைத் தொடர்ந்து காலை 8 முதல் 9 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கொடியை திருவனந்தபுரம் வஞ்சீயூர் அதியறா மடம் தந்திரி கோகுல் நாரயணரு ஏற்றி வைத்தார். இதில் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தேவசம் கண்காணிப்பாளர் சிவகுமார் உட்பட அறநிலையத்துறையினர், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவில் சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. 2ம் நாள் (15ம் தேதி) காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி, 3ம் நாள் (16ம்தேதி) காலை 8 மணிக்கு நாரணீய பாராயணம், இரவு 9மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி ஆகியவை நடக்கிறது. 10ம் நாள் (23ம் தேதி) காலை 11 மணிக்கு திருவிளக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக் கச்சேரி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆராட்டுக்கு ஆற்றுக்கு சுவாமிஎழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

The post திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Aipasi Festival Flag ,Adhikesava Perumal Temple ,Thiruvatar ,Panguni ,Vaishnava ,Thiruvatar Adhikesava Perumal Temple ,Ipasi ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...