×

வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி பசுமாடு பலி

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் பகுதியில் நேற்று மதியம் இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது வடமழை பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவரது வீட்டுக்கு வெளியே பின்பக்கம் கட்டி கிடந்த சினை பசு மாட்டை மின்னல் தாக்கியதில் அந்த மாடு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது. இது குறித்து கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்குவந்து மாடு உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த பசுமாட்டின் மதிப்பு ரூ. 40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

The post வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி பசுமாடு பலி appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Kariyapatnam ,Vadamash ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும்...