×

நடைபாதைகளில் கால்வாய்கள் திறந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம்

 

ஊட்டி, அக்.13: சேரிங்கிராஸ் பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள நடைபாதைகளில் சில இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் திறந்து கிடப்பதால் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊட்டியில் உள்ள சாலையோரங்களில் அலங்கார நடைபாதைகள் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டிற்கு முன் துவங்கி தற்போது வரை நடந்து வருகிறது.

குறிப்பாக, நொண்டிமேடு முதல் சேரிங்கராஸ் வரையில் சாலையின் இரு புறங்களிலும் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய்கள் மீது அலங்கார நடைபாதையும் அமைக்கப்பட்டது. இந்த நடைபாதையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டும், இரு புறங்களிலும் அலங்கார பாதுகாப்பு கம்பிகள் ஆகியன அமைக்கப்பட்டன. இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றது.

ஆனால், சில இடங்களில் இன்னும் கால்வாய்கள் மீது மூடிகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், திறந்தவெளியில் கால்வாய்கள் செல்கிறது. இந்த நடைபாதையில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த நடைபாதைகளில் திறந்து கிடக்கும் கால்வாய்களில் மூடிகள் அமைக்க வேண்டும் என பொதுக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post நடைபாதைகளில் கால்வாய்கள் திறந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Charingcross ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...