×

டூவீலர் மீது கார் மோதி மூதாட்டி பலி

 

திருவாடானை, அக்.13: திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தை சேர்ந்தவர் மல்லு(75). இவர் தனது பேரன் முத்துக்குமாருடன் டூவீலரில் ஆனந்தூருக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்துள்ளனர். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காத்தகுடி அருகில் வந்தபோது, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமரவேல் ஓட்டி வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் மூதாட்டி மல்லு பரிதாபமாக உயிரிழந்தார். முத்துக்குமார் படுகாயம் அடைந்தார். அவர், திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த அமரவேலை கைது செய்தனர்.

The post டூவீலர் மீது கார் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Mallu ,Pannawayal ,Anandur ,Muthukumar ,Dinakaran ,
× RELATED வைக்கோல் எரிந்து முதியவர் பலி