×
Saravana Stores

எழும்பூரில் ஓட்டல் ஒன்றில் ஸ்கூட்டரில் இருந்து ஹெல்மெட் திருடிய சிறப்பு உதவி ஆய்வாளர்: டிவிட்டரில் வீடியோ வைரலால் பரபரப்பு

சென்னை: சென்னையை சேர்ந்த சத்தியன் என்பவர் கடந்த 5ம் தேதி எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலுக்கு தனது ஸ்கூட்டரில் இரவு 7 மணிக்கு வந்தார். பிறகு தனது ஹெல்மெட்டை ஸ்கூட்டர் கண்ணாடியில் வைத்துவிட்டு ஓட்டலுக்குள் சென்றுவிட்டார். பிறகு 8 மணிக்கு வீட்டிற்கு செல்ல சத்தியன் வந்து ஸ்கூட்டரை பார்த்தபோது, அதில் வைத்திருந்த ஹெல்மெட் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சத்தியன் உடனே ஓட்டல் மேலாளரிடம் புகார் அளித்தார். அதன்படி ஓட்டல் மேலாளர் ஓட்டல் பார்க்கிங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, எழும்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் விஜயன் என்பவர் சீருடையில் தனது ஸ்கூட்டரில் வந்து சிறிது நேரம் நோட்டமிட்டு, பிறகு ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் சத்தியன் சிசிடிவி காட்சிகளை பெற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவு செய்து அதன் மூலம் சென்னை மாநகர காவல்துறைக்கு புகார் அளித்தார். புகாரின் மீது தற்போது உயர் அதிகாரிகள் சிறப்பு ஆய்வாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எழும்பூரில் ஓட்டல் ஒன்றில் ஸ்கூட்டரில் இருந்து ஹெல்மெட் திருடிய சிறப்பு உதவி ஆய்வாளர்: டிவிட்டரில் வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Egmore ,Chennai ,Sathyan ,Ashoka Hotel ,Twitter ,Dinakaran ,
× RELATED மங்களுர்-எக்மோர் தீபாவளி சிறப்பு ரயில் போத்தனூரில் நின்று செல்லும்