×

வெடிகுண்டுகளுடன் 3 ரவுடிகள் கைது

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மர்ம கும்பல் பதுங்கியிருப்பதாக தாம்பரம் காவல் துணை ஆணையாளருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவர்கள் பையை சோதனை செய்தனர். அதில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சங்கர்நகர் காவல் நிலையம் அழைத்து சென்று முறைபடி விசாரணை நடத்தினர்.

இதில், பம்மல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சத்யா (எ) பம்மல் சத்யா (26), மூங்கில் ஏரி முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மதன் (எ) குள்ள மதன் (23) மற்றும் செந்தமிழ் செல்வன் (27) என்பது தெரியவந்தது. சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 3 பேரும் மீதும் சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் இவர்கள் முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய பதுக்கியிருந்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரவுடிகளை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வெடிகுண்டுகளுடன் 3 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Anakaputtur ,Adyar river ,Dinakaran ,
× RELATED சலுகை விலை அறிவிப்பால் துணிக்கடையில்...