×

மனநல தினத்தை முன்னிட்டு தென்காசியில் விழிப்புணர்வு பேரணி

தென்காசி, அக்.12: தென்காசியில் உலக மனநல தினத்தை முன்னிட்டு போதி மன மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு போதி மனம் மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் கார்த்திக் துரைசாமி தலைமை வகித்தார். மருத்துவர் நீலவேணி கார்த்திக் முன்னிலை வகித்தார். பேரணியின் போது மனநல மருத்துவர் கார்த்திக் துரைசாமி மனநலம் குறித்தும், மனநலத்தை எவ்வாறு காப்பது என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோவில் வாசல் முதல் புதிய பேருந்து நிலையம் வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியின் போது மனநலம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில் தென்காசி கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, தென்காசி செயின்ட் மேரிஸ் நர்சிங் கல்லூரி மாணவிகள், தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் போதி மன மருத்துவமனை பணியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post மனநல தினத்தை முன்னிட்டு தென்காசியில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Awareness Rally ,Tenkasi ,Mental Health Day ,Bodhi Mental Hospital ,World Mental Health Day ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி