×

லித்தியம், நியோபியம் உள்ளிட்ட 3 முக்கிய கனிமங்களுக்கான உரிமைத்தொகை நிர்ணயம்

புதுடெல்லி: சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் லித்தியம், நியோபியம், அரிய புவி தனிமங்கள் (ஆர்இஇ) ஆகிய 3 முக்கிய கனிமங்களை சுரங்கம் தோண்டி எடுப்பதற்கான உரிமைத் தொகைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் 2வது அட்டவணையில் திருத்தம் செய்ய ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, லித்தியம் மற்றும் நியோபியத்திற்கான உரிமைத்தொகை 3 சதவீதமாகவும் ஆர்இஇக்கான உரிமைத்தொகை 1 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல, இளைஞர்களின் மேம்பாட்டிற்கான தன்னாட்சி அமைப்பான மேரா யுவ பாரத் எனும் எனது இளையபாரதம் என்ற அமைப்பை நிறுவவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

The post லித்தியம், நியோபியம் உள்ளிட்ட 3 முக்கிய கனிமங்களுக்கான உரிமைத்தொகை நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Modi ,
× RELATED மாணவர்களின் கனவுகளை சிதைத்து...