×

மஞ்சளாறு அணை ஆற்றின் தடுப்பணை ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

*பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை ஆற்றில் உள்ள தடுப்பணைகள் கட்டப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். கடந்த ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான சாலைகள், அரசு நிலம், ேகாயில் நிலம், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை. சாலைகள், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சாலைகள், நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள சாலைகள், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

மஞ்சளாறு அணை ஆற்றில் கெங்குவார்பட்டி அருகே தடுப்பணை நீர்த்தேக்க பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து அதில் தென்னை, இலவம், எலுமிச்சை உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டுள்ளது. இதனால் தடுப்பணைகள் பயனற்று நீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் மஞ்சளாறு அணை ஆற்றில் இருந்து கண்மாய்களுக்கு நீர் செல்லும் பாதை, தடுப்பணைகள் என அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பாசன விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் அந்த பகுதி விவசாயிகள் நீர்தேக்க மற்றும் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதன் அடிப்படையில் கடந்த மாதம் மதுரை உயர்நீதிமன்றம் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவைகளை அகற்றி நீர்நிலைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பொதுப்பணித்துறை செயற்பொறியளர் சவுந்திரம், உதவி செயற்பொறியளர் கமலக்கண்ணன் மற்றும் தேவதானப்பட்டி போலீசார் மஞ்சளாறு அணை ஆற்றில் உள்ள தடுப்பணை ஆக்கிரமிப்பு, கண்மாய்களுக்கு நீர் செல்லும் வழித்தட ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளில் உள்ள தென்னை, இலவம், எலுமிச்சை உள்ளிட்டவைகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அகற்றினர். இதனால் மஞ்சளாறு அணை பாசன வசதி விவசாயிகள் மகிழ்ச்சியைடந்தனர்.

The post மஞ்சளாறு அணை ஆற்றின் தடுப்பணை ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Manchalaru dam ,Devadanapatti ,Devadhanapatti ,Manjalaru ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை